Sunday, January 25, 2009

516. சோ சொன்னார் - வாலி செய்தார் !

சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் சோ கூறியதற்கு ஏற்றாற்போல, வாலி முதல்வரை வானாளவிய உயரத்துக்குப் பாராட்டி இருக்கிறார் ! இதையெல்லாம் விமர்சனம் பண்ணக் கூடாது. ரசித்து விட்டு போய்க்கினே இருக்கணும், விடு ஜூட் ;-)

ஒபாமா ஒப்பாகுமா: கருணாநிதிக்கு வாலி புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 25, 2009, 11:29 [IST]

சென்னை: சாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய். அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா. சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய். அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா? என்று முதல்வர் கருணாநிதிக்கு கவிஞர் வாலி புகழாரம் சூட்டினார்.

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தமிழர் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சங்கத் தமிழ் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் தமிழை செம்மொழியாகவும், தை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும் அறிவித்த முதல்வரை பாராட்டி கவிதை முற்றம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

கவிஞர் வாலி தலைமை தாங்கினார். புலவர் புலமைபித்தன், கவிஞர்கள் பழனி பாரதி, பா.விஜய், தமிழச்சி தங்கபாண்டியன், இளந்தேவன், கபிலன், விவேகா, நெல்லை ஜெயந்தா ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்தார்கள்.

காலை 11 மணிக்கு வந்த முதல்வர் கருணாநிதி, இரண்டரை மணி நேரம் நிகழ்ச்சியை ரசித்து பார்த்தார்.

மத்திய அமைச்சர் ராஜா, மாநில அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, கோ.சி.மணி, எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் கனிமொழி, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் இதை கண்டு களித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கத் தமிழ் பேரவை தலைவர் துரைமுருகன், செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் செய்திருந்தனர்.

கவிஞர் வாலியின் கவிதை ..

தமிழ் வணக்கம், தமிழின தலைவர் வணக்கம்.
எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்.
வைப்பேன் என் தலைவனுக்கு மட்டும் ஒரு வணக்கம்.

எவரேனும் என்னுவரோ தலைவன் வேறாக, தமிழ் வேறாக. தலைவரல்லவா இருக்கிறார் தமிழுக்கு வேராக.
கலைஞர் பெருமானே உன் வருகை, கண்டதும் தூக்குவேன் என் இருகை.

உயரிய தலைவா உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு வாயை திறந்தால் தான் என் வாய்க்கும் கவிதை வாய்க்கும்.

என் பாட்டுக்கு நீதான் பிள்ளையார் சுழி.
உன்னை முன் வைக்காமல் என்ன எழுதினாலும்,
என் பாட்டு வாங்கும் பெரிய சுழி.

அருமை தலைவா,
ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய். அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்.
தேர்தலுக்கு தேர்தல் 5 விரல்களை அகலக்காட்டி,
அஞ்சு அஞ்சு என்று அயலாரை ஓட்டி,
5 முறை அரியணை ஏறிய அஞ்சுக செல்வா.

தேர்தல் வரலாற்றில் உன்னை வெகுவாக விமர்சனம் செய்ய டில்லியில் ஒரு கோபால்சாமி,
திருமங்கலத்தில் ஒரு கோபால்சாமி.
நீயோ இந்த 2 கோபால்சாமிகளையும் புறம் தள்ளிய கோபாலபுரத்து சாமி.
எனவேதான் கும்மாளமிட்டு உன்னை கொண்டாடுகிறது இந்த பூமி.

அய்யா,
50 ஆண்டு காலம் உன் சேவடிபட்ட சபை சென்னை சட்டசபை.
நாவில் தமிழ் ஏந்தி நீ நற்றமிழ் இட்ட சபை.
முதல் முதல் தேர்தல் குளத்தில் குளிக்க நீ தொடங்கிய ஊர்தான் குளித்தலை.
குளித்தலைக்கு பிறகு இதுவரை குனியா தலை உன் தலை. இனியும் குனியாது வெற்றியை குவிக்கும் என்பதும் உன் தலை.

சாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய்.
அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா.
சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய். அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா?.

உன்னை விட்டு வலது போனால் என்ன, இடது போனால் என்ன.
மேலே விழுந்த நரி பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சிரி.
உன்னிடம் உள்ளது நடு நிலைமை.
நடுநிலைமை தான் நல்ல தலைமை.
கலைஞர்கோனே,
கருப்பு கண்ணாடி அணிந்த கவி வெண்பாவே.
நீயே உனக்கு நிகர்.
நீ நகர்ந்தால் உன் பின்னே நகர்கிறது நகர்.

நிஜம் சொன்னால், ரஜினியை விட நீயொரு வசீகரமான 'பிகர்'.
நாவினிக்க நாவினிக்க உன்னை பாடியே என் உடம்பில் ஏறிபோனது சுகர்.
நீ எங்கள் கிழக்கு, உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு.
நம்மொழி செம்மொழி, அதனை அங்கீகரிக்காது நாள் கடத்தியது நடுவண் அரசு.
நீ குட்டினாய் உடனே குனிந்தது அதன் சிரசு.
அதுபோல் தமிழனின் அடையாளங்களை வட்டியும், முதலும் சேர்த்து வள்ளலே நீதான் மீட்டாய்.

தரை மீனை திரும்ப தண்ணீரில் போட்டாய்.
அதனால் தான் அய்யா உன்னை அவருக்கு நிகர் அவர், தமிழனை துன்பம் தீண்டாது மீட்கும் தடுப்பு சுவர்.
மையம் ஏற்கும் வண்ணம் உன்னிடம் உள்ளது பவர்.
அத்தகு பவர் உன்போல் படைத்தவர் எவர்.

அமைச்சர் பெருந்தகை ஆற்காட்டாரிடம் உள்ள பவரால், வீட்டு விளக்கு எரியும், நடுரோட்டு விளக்கு எரியும்.
உயரிய தலைவா உன்னிடம் உள்ள பவரால் தான் நாட்டு விளக்கு எரியும், நற்றமிழ் பாட்டு விளக்கு எரியும்.

குப்பன், சுப்பன் வாழும் குப்பங்கள் ஓயாமல் உன்னால் தான் ஒளிர்கிறது, அடுப்பு விளக்கு, அன்பு விளக்கு, அமைதி விளக்கு, அறிவு விளக்கு என பல்விளக்கை இன்று, உன்னை பணித்து வாழ்த்தி சொல்வேன் போய் நீ பல் விலக்கு என்று.
தமிழா என் நண்பா, உனக்கு தருவேன் கேள் ஒரு வெண்பா.

நன்றி: தட்ஸ்டாமில்.காம்

ஒரு சந்தேகம்: தற்போது பத்மபூஷன் விருது பெற்றிருக்கும் ஜெயகாந்தன் அவர்களையும் பாராட்டி வாலி கவிதை பாடுவாரா ? அது வெண்பா ஸ்டைலில் இருந்தால் இன்னும் விசேஷம் :-)
அப்பாடி, ஜெ.கா விருது பெற்ற விசயத்தையும் தமிழ் கூறும் நல் உலகுக்கு அறிவிச்சாச்சு!

22 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Best Wishes to JK for getting Padmabhushan !

சென்ஷி said...

பத்மபூஷன் விருது பெற்ற ஜெயகாந்தன் அய்யாவிற்கு எனது வாழ்த்துக்கள்..

வாலியின் வரிகள் அருமை :)

said...

வாலிபக் கவிஞராக இருந்து இன்று கலைஞரின் பாதார விந்தங்களில் புகழுக்காக தன்னை விலைகொடுத்த வாலி இப்படித்தான் எழுத முடியும்..

அவர் எழுதிய

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்..

மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்..

என்ற வரிகள் அவருக்கே இன்று அதிகம் கச்சிதமாய் பொருந்துகிறது..

புகழுடன் வாழ்க்கையை ஆரம்பித்து பிறர் இகழ வாழ்க்கையை முடிக்கப்போகும் திமுக வின் பிரச்சார பீரங்கி வாலிக்கு வாழ்த்துக்கள்..

இத்துடன் ஜெயகாந்தனுக்கு வாழ்த்து சொன்னால் அவரை அவமதிப்பது போலாகும்..

manasu said...

இதையெல்லாம் விமர்சனம் பண்ணக் கூடாது. ரசித்து விட்டு போய்க்கினே இருக்கணும், விடு ஜூட் ;-)))))))

dondu(#11168674346665545885) said...

இம்மாதிரி விடாது வரும் பாராட்டுகளை ஏற்க கூச்சமாக இருக்காதா அலுப்பு தட்டாதா என்றும் சோ அவர்கள் கூட்டத்தில் கேட்டார்.

அதுவும் முதலமைச்சராக இருந்து கொண்டு இம்மாதிரி செய்வது காலவிரயமே என்று பொருள் வருமாறும் பேசினார்.

இதே போல காமராஜ் அவர்களை மேடையில் வைத்து கொண்டே அவர் காந்தியடிகளைவிட மேலானவர் என்று பொருள் ப்ட பேசிய பேச்சாளரை சீறலுடன் அடக்கி உட்கார வைத்தார் காமராஜ் அவர்கள்.

அவர் அமர்ந்த முதலமைச்சர் பீடத்தில் இம்மாதிரியும் சிலர், என்ன செய்வது? தமிழகத்தின் தலைவிதி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் said...

சுவைத்தேன்

/எவரேனும் என்னுவரோ தலைவன் வேறாக, தமிழ் வேறாக. தலைவரல்லவா இருக்கிறார் தமிழுக்கு வேராக.
கலைஞர் பெருமானே உன் வருகை, கண்டதும் தூக்குவேன் என் இருகை./

இதைத் தான் ??????????????????

said...

How a man can sit and enjoy such things, self-praising worse than others praising him, is beyond sanity.

I think Rajni was right in his song. Live longer that 8*8, and a man is simply just a mannequin. Disgusting self-praise. An embarassment to the pioneers of DMK and ADMK, such self-praise and power-hunger.

-kajan

said...

வாலி போன்ற கவிஞருக்கு இந்த கூஜா தூக்கும் வேலை தேவையா. கூச்சமே இல்லாமல் காலை கழுவி குடிக்கிற அளவுக்கு வந்துவிட்ட வாலியை நினைத்தால் பரிதாமாக இருக்கிறது.

said...

டோண்டு சார்..
நீங்க ஒங்கடவாள வானத்துக்கும் பூமிக்கும்
புகழறதுல்ல.. எத்தன உதாரணம் வேணும்..
வாலி ஒரு சனநாயக கவிஞன்... அவர் பாராட்டினா
ஒங்களுக்கு என்னங்காணும்.. ஜெ.. பாராட்டு விழா
பாத்திருக்கேளா.. அவர் முதலமச்சரா வந்தா நம்மவா
நடத்தற பாராட்ட பாத்திருக்கேளா.. கொஞ்சம்
பழைய கேசட் இருந்தா போட்டு பாருங்கோ..

Unknown said...

அவர் அமர்ந்த முதலமைச்சர் பீடத்தில் இம்மாதிரியும் சிலர், என்ன செய்வது? தமிழகத்தின் தலைவிதி//

I strongly believe the word SILAR here includes our beloved AMMA Dr JJ too.. !

these kind of happenings are common here TN. not just politicians..even a ward councellers or a businessman feels happy to see his name in flux board.. this happens for actors, actress too..
what to do .. fate...

said...

\\சாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய்.
அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா.
சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய். அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா?.//

பாவம் ஒபாமா.. வாலி போன்ற அல்லக்கை கவிஞனேல்லாம் கண்டவரோடு ஒப்புமை படுத்தி பேசும் படி ஆனதற்கு.

வாலிக்கு ஏன் இப்படி ஒரு பிழைப்பு. நாய் பிழைக்குமையா இந்த பிழைப்பு (உபயம் அவர் தலைவர் தான்)

கபீஷ் said...

Anony insulted dog by comparing it with Vali :-(:-(

ramachandranusha(உஷா) said...

மனசு, ரீப்பிட்டு :-)

"இவர் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை
அதில் ஈனமில்லை
இவர் எப்போதும் வால் பிடிப்பார்"

Jackiesekar said...

நான் ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல தலைவா...

said...

//அவர் அமர்ந்த முதலமைச்சர் பீடத்தில் இம்மாதிரியும் சிலர், என்ன செய்வது? தமிழகத்தின் தலைவிதி.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

என்ன செய்வது நிறந்தர முதல்வரா புகழ்ச்சியே பிடிக்காத அம்மாவே இருந்திருந்தா "ரொம்ப" நல்லவே இருந்திருக்கும்

அருணகிரி said...

நன்றிக்குக் கவியெழுத தமிழ்வரலாம் தப்பில்லை
என்றைக்கும் புலவர்கள் செய்ததுதான் என்றாலும்
பன்றிக்கும் பணத்துக்கும் கவியெழுத என்றுதமிழ்
இன்றைக்கு ஆனதுதான் எண்ணிமனம் நோகிறது.

வாலாட்டிப் பாராட்டிக் கவியெழுதி வருவதனால்
வாலியொரு குரங்கல்ல நாய்.

மன்னவன் என்றாலும் அறமிழந்த சின்னவனைச்
சொன்னதொரு மரபில்லை தமிழுக்கு- தன்னலமாம்
வேலியை உடைத்து விரிவடைந்த நற்றமிழை
வாலிநீ செய்தாய் வதம்.

வடுவூர் குமார் said...

வாலி - 'வாளி" தூக்கிட்டாரோ!!

said...

இதே போல காமராஜ் அவர்களை மேடையில் வைத்து கொண்டே அவர் காந்தியடிகளைவிட மேலானவர் என்று பொருள் ப்ட பேசிய பேச்சாளரை சீறலுடன் அடக்கி உட்கார வைத்தார் காமராஜ் அவர்கள்.

அவர் அமர்ந்த முதலமைச்சர் பீடத்தில் இம்மாதிரியும் சிலர், என்ன செய்வது? தமிழகத்தின் தலைவிதி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
---------------------------------

Super DONDU Sir.

Aana, inga YAARUKKUMEY VETKAM ILLAI

Vinu said...

@ அருணகிரி

நீங்கள் எழுதிய கவிதை மிக நன்று. ஆனால் வெண்பாவில் பல இடங்களில் தளை தட்டுகிறது. திருத்திவும். :(

enRenRum-anbudan.BALA said...

கருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

எல்லாருக்கும் நாளை விரிவாக மறுமொழி இடுகிறேன். தற்சமயம் மைக்ரேன் தலைவலியால் அவதி !

அருணகிரி said...

வினு,

நீங்கள் சொன்னது சரிதான். சரிசெய்து பதித்திருக்கிறேன். படித்துப்பாருங்கள். (உதவிய நண்பருக்கு நன்றி).

வாலாட்டிப் பாராட்டிப் பாட்டெழுதி நிற்பதனால்
வாலி குரங்கல்ல நாய்.

மன்னவன் என்றாலும் மண்தர்மம் கொன்றவனைச்
சொன்னதோர் கேடில்லை நற்றமிழில்- தன்னலமாம்
வேலி தனைத்தாண்டி வேர்விட்ட எம்மொழியை
வாலிநீ செய்தாய் வதம்.

dondu(#11168674346665545885) said...

கலைஞர் இப்படியென்றால், அம்மையார் தன்னை விட வயதானவர்கள் தன் காலில் விழும்போது ஆசி கொடுக்கும் போஸில் நிற்பவர். அவருக்கும் வெட்கம் கிடையாதுதான் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.

ஆனால் இப்பதிவு கலைஞர் பற்றியது. ஆகவே அவரைப் பற்றி மட்டுமே பேசத் துணிந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails